Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நட்புக்காக’ நடிக்கப்போகும் விஜய் சேதுபதி..!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு படத்தின் டைட்டில் போடும்போது ‘நட்புக்காக’ என்று ஒரு நடிகர் அந்த படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் சில காட்சிகள் அவர் நடித்திருப்பதை சுட்டிக்காட்டவே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தற்போது நட்புக்காக என்ற வார்த்தையைதான் கேமியோ என்று மாற்றிவிட்டனர். 

இந்த கேமியோ விஷயங்களில் அதிகம் தென்படும் நடிகர் விஜய் சேதுபதி. ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் மீன் ஒன்றிற்கும் ‘அண்டாவ காணோம்’ படத்தில் அண்டாவிற்கும் டப்பிங் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்திலும் கேமியோ பண்றார் என தகவல்கள் வந்தன. தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் முருகானந்தம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கதாநாயகன்’ படத்திலும் விஜய் சேதுபதி கேமியோ பண்றார் என தகவல்கள் வந்துள்ளன. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ