Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபலங்கள் பேசாததை நான் பேசுவேன் - நடிகை நமீதா!

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை​, திரைக்கதை​,​ வசனம், பாடல்கள்,​ இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. . இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார்.​ இந்நிகழ்ச்சியில் ​தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை நமீதா பேசியது பலரையும் கவனிக்க வைத்தது. ''சமூக கருத்தைச் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும். என்னைப் பொருத்தவரை சமுதாயத்துக்கு எதாவது சொல்ல இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று அரசியல், மற்றொன்று சினிமா. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வமாக இருந்து வருகிறேன். குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது என்பதை இந்த படம் பேசுகிறது. எனக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆமாம், எங்கள் வீட்டில் மூன்று நாய் குட்டிகளை வளர்த்து வருகிறேன். ஒரு பெற்றோர் போல அவற்றை அரவணைத்துப் பார்த்து வருகிறேன். என் அண்ணன் இரண்டு பெண் குழந்தைகளையும் கவனித்து வருகிறேன். மேடையில் எந்த பிரபலமும் குழந்தைகளுக்கான பாலியல் சீண்டல்களை வெளிப்படையாக பேசியது கிடையாது. ஆனால் நான் பேசுவேன். இன்று பல குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி வருகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லி தருவது அவசியம்'' என்றார். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close