Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நாள் தள்ளிப்போகும் 'கடவுள் இருக்கான் குமாரு'

கடந்த வாரம் ரிலீசான 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே ரீலீசாக இருந்த படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து, இந்த வாரம் வியாழக்கிழமை படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கூறி இருந்தது. தற்போது, ஒரு நாள் தள்ளி இவ்வாரம் வெள்ளிக்கிழமை 'கடவுள் இருக்கான் குமாரு' வெளி வர உள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சிவா கூறி இருக்கிறார். மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும், விநியோகஸ்தர்களுடன் சில சிக்கல்களும் பட ரிலீஸ் தேதி தாமதமானதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படம், தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் வெளியாகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close