Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“மக்கள் மனதில் ஆழமாக பதியணும்..!” - நடிகை சஞ்சிதா ஷெட்டி

‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவுக்குத் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த சஞ்சிதா ஷெட்டி, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் பல இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது ‘ரம்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘என்னோடு விளையாடு’ என அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். 

விரைவில் வெளிவரயிருக்கும் ‘ரம்’ படத்தைப் பற்றி சஞ்சிதா கூறியதாவது, “ ‘ரம்’ படத்தில் நான் நடித்திருக்கும் ரியா என்கிற கதாபாத்திரம், படம் பார்க்கும் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். ரியா கதாபாத்திரம் பலர் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். இதே மாதிரி மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய கதாபாத்திரங்கள் அதிகம் நடிக்கணும்னு ஆசைப்படுறேன்.

‘ரம்’ படத்தில் விவேக் சார் போன்ற திரையுலகின் மூத்த கலைஞரோடு பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவரிடம் இருந்து  நாங்கள் கற்று கொண்டது ஏராளம். ‘ரம்’ திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமாகும் ஹ்ரிஷிகேஷ், தன்னுடைய கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளார். ‘ரம்’ படத்தில் திகில் என்பதையும் தாண்டி, ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்ய விருந்தாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார், நடிகை சஞ்சிதா ஷெட்டி.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close