Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற 20-ம் தேதி மும்பையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு இந்த விழா தொடங்கும் எனவும், இந்த விழாவில் நேரடி ஒளிபரப்பு லைக்கா நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை ஹிந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவுள்ளார். 

ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், எமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ