Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கொலவெறி’க்கு வயசு அஞ்சு..!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ திரைப்படத்தின் ‘கொலவெறி’ பாடல் கொலவெறி ஹிட்டானது அனைவரும் அறிந்ததே. ஒற்றை பாடலில் உலகப்புகழ் பெற்றார்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது. இன்றுடன் கொலவெறி பாடல் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுவரை இந்த பாடலை 11 கோடிக்கும் மேலானோர் பார்த்து ரசித்திருக்கின்றனர். 

கொலவெறி பாடலின் ஐந்தாவது பிறந்த நாளன்று, அந்த பாடல் பிறந்த கதையை நாம் அனைவரும் நினைத்து பார்ப்போம். கொலவெறி பாடலை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்வதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானதால், என்ன செய்வதென்று தெரியாமல் பாடலை பதிவு செய்யும்போது எடுத்த வீடியோ காட்சிகளை இணைத்து மேக்கிங் வீடியோவாக உடனே ரிலீஸ் செய்தனர். அவசர அவசரமாக ரிலீஸ் செய்த பாடல் அதிரி புதிரியாக ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ