Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளரான நிதின் சத்யா..!

ஃப்ரைடே மேஜிக் என்டர்டெயின்மென்ட் என்கிற பெயரில் நடிகர் நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார். இந்த விழாவில் பல திரை நட்சத்திரங்களும் சென்னை-28 இரண்டாம் பாகத்தில் நடித்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை இயக்க இருக்கிறார் அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம்.

விழாவில் பேசிய நிதின் சத்யா, “திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது ’ஃப்ரைடே (வெள்ளிக்கிழமை). அதனால் தான் எங்களின் நிறுவனத்துக்கு  ’ஃப்ரைடே மேஜிக் என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரை  தேர்ந்தெடுத்தோம். வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும்  தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆணி வேர். அத்தகைய தரம் வாய்ந்த படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்புத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக  தொழிலதிபர் ’பிளாஸ்’ கண்ணனோடு கை கோர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சி‘ என்று கூறினார்,  நிதின் சத்யா.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close