Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“யுவனின் இசை புத்துயிர் கொடுத்திருக்கு..!” - ‘யாக்கை’ பட இயக்குநர், குழந்தை வேலப்பன்

குழந்தை வேலப்பன் இயக்கித்தில் கிருஷ்ணா, சுவாதி நாயகன் நாயகியாகவும் மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் நடித்திருக்கும் படம் யாக்கை. இந்தப் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா  இசையில், தனுஷ் பாடிய  ’சொல்லி தொலையேன் மா’ பாடலும், சின்மயி - யுவன்ஷங்கர் ராஜா பாடியிருக்கும் ’நான் இனி காற்றில்...’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது யாக்கை படத்தின் பின்னணி இசையையும் யுவன்ஷங்கர் ராஜா நிறைவு செய்திருக்கிறார். 

பின்னணி இசையைப் பற்றி இயக்குநர் குழந்தை வேலப்பன் கூறியதாவது, ‘ஒரு திரைப்படத்துக்குப் பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு இயக்குநராக நான் நன்கு அறிவேன். அந்த வகையில் யுவன்ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் பின்னணி இசை யாக்கை படத்துக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.

வர்த்தக ரீதியாக எங்கள் திரைப்படம் வெற்றி பெற ஆணி வேராக செயல்படுவது அவருடைய இசை தான். வருகின்ற டிசம்பர் மாதத்தில் நாங்கள் யாக்கை படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். யாக்கை படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.‘ என்று கூறினார் இயக்குநர் குழந்தை வேலப்பன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ