Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலெக்டராக கலக்கியிருக்கும் நயன்தாரா..! - ’அறம்’ இயக்குநர் கோபி நயினார்

அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி வரும் ’அறம்’ திரைப்படத்தில் நயன்தாரா, ’காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் - ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ்,  சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்திருக்கும் இந்த ’அறம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்களுள் ஒருவரான பீட்டர் ஹெய்ன் என தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

 ’அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் கூறியதாவது, ‘உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி  இருப்பது தான் ’அறம்’. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும். எனவே தான் நாங்கள் படத்துக்கு ’அறம்’ என்று தலைப்பிட்டோம். ’மாவட்ட ஆட்சியர்’ என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா வழங்கியிருக்கிறார். அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. விரைவில் ’அறம்’ திரைப்படம் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது‘ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ