Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வந்த ஒளிப்பதிவாளர்கள்..!

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருந்தநிலையில், 11 மாதங்களுக்கு முன்பு தேர்தலை வெற்றிக்கரமாக நடத்தி, பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

பி.சி.ஸ்ரீராமுக்கு முன்பு தலைவர் பொறுப்பில் இருந்த பெப்சி சிவாவின் தலைமையில் 2015-ம் ஆண்டு மலேசியாவில் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்காக பல கோடிகளை செலவு செய்துவிட்டு அதற்கு இன்னும் கணக்கு காட்டவில்லையாம். அதனால் பொதுக்குழு கூடி பெப்சி சிவாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர். சரியாக கணக்கு காட்டாததால் தற்போது பொறுப்பில் இருப்பவர்களால் கணக்கு பார்க்க முடியவில்லை என்பதால் பெப்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. புகாரைக் கொடுக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேல்ராஜ், சுகுமார் ஆகியோர் வந்தனர். 

படங்கள்:ஆ.முத்துக்குமார் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close