Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ ‘சைத்தான்’ எனக்கு தேவதை..!” - அருந்ததி நாயர்

 

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ திரைப்படம், டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தான் நடித்த திரைப்படம் வெளியாகும் அந்த மகிழ்ச்சியான தருணம் பற்றி ‘சைத்தான்’ படத்தின் நாயகி அருந்ததி நாயர் கூறியதாவது, “மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ’சைத்தான்’னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில், சைத்தானை தேவதை என்றே சொல்வேன்" மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்.

 

‘சைத்தான்’ படத்தின் ஸ்டில்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

 

" ‘என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்துக்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான  கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை, இந்த சைத்தான் பெற்றுத் தந்திருக்கிறது என்பதை நான் பெருமையாக சொல்வேன். பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்தக் குரலில் டப்பிங் பேச பெரும்பாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் விஜய் ஆண்டனி, என்னுடைய சொந்த குரலிலேயே இந்த படத்துக்கு டப்பிங் பேச வைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி” என்று ஆனந்தமாக கூறுகிறார் அருந்ததி நாயர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ