Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசம்பர் 4-ம் தேதி 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் இசை வெளியீடு!

வரும் டிசம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர் பார்த்திபன் இயக்கும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் ஆடியோ ரிலீஸ் வெளியாக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

இந்த படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமையா, சிங்கம்புலி ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், அருண் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

'இந்த படம் சாந்தனுவுக்கு திருப்பு முனையாக அமையும். அவருக்கு இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல பிரேக் கிடைத்தால் என்னை விட சந்தோஷப்படுபவர்கள் வேறு யாரும் கிடையாது. உதடுகளில் படத்தின் தலைப்பு இருப்பதால் தவறான படம் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய வித்தியாசமான படமாக இது இருக்கும். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி வெளியிட உள்ளேன். படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய குரு நாதர்கள் கே.பாலசந்தர் மற்றும் கே.பாக்யராஜ் இருவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் தான் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்து ஒவ்வொரு அப்டேட்டையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

எடிட்டர் சாய்ஸ்