Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“கர்நாடக சங்கீதத்தில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு பீஷ்மர்..!” - நடிகர் சிவகுமார்

“பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்றே சொல்லலாம். அகில இந்திய அளவில் உயரிய விருதான, மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படிப்பட்ட மனிதர்கள் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள்.

ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல்  படத்துல T.S.பாலையா அவர்களுக்கு ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடலை பாடினார். அந்த படம் வெற்றிப் படமாக  ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது.

ஏன் என்றால் மாறுபட்ட குரல்,  T.S.பாலையாவின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் ‘கவிகுயில்” படத்தில் எனக்காக அவர் டூயட் பாடினார்.

சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணர், ராதா வேடத்தில் நடித்தோம். அது தான் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல். அந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களால் இன்று வரை மறக்கமுடியாத பாடலாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு பாடலை அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

படம்:தே.அசோக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close