Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது முழுக்க முழுக்க யுவன் - செல்வா காம்போ

செல்வராகவன் 'இரண்டாம் உலகம்' படத்துக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. எஸ்.ஜே.சுர்யா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வெகு நாட்களுக்குப் பிறகு யுவன்-செல்வராகவன் கூட்டணியில் வெளியாக இருக்கும் படம் என்பதால், படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் இசை நாளை வெளியிடப்பட உள்ளது. படத்தில் 'குட்,பேட் & அக்லி', 'கண்ணுங்களா செல்லங்களா', 'மாலை வரும் வெண்ணிலா', 'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா' என நான்கு பாடல்கள் இடம்பெற உள்ளன. இதில் மாலை வரும் வெண்ணிலா பாடலை யுவனுடன் சேர்ந்து தனுஷ் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி நான்கில் மூன்று பாடல்களை யுவனே பாடியிருக்கிறார். நான்கு பாடல்களையும் இயக்குநர் செல்வராகவனே எழுதியுள்ளார். முழுக்க முழுக்க யுவன் - செல்வா காம்போவில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல்கள் நாளை யுவனின் யூட்யூப் தளத்தில், வெளியாக உள்ளது.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ