Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருண்விஜய்யை பாராட்டிய தயாரிப்பாளர்..!

ஈரம், வல்லினம், ஆறாது சினம் ஆகிய படங்களை இயக்கிய, அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

சமீபத்தில் முழு படத்தையும் பார்த்த நடிகர் அருண்விஜய் கூறியதாவது, “ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு.

நல்லதொரு கதை களமும், அந்த கதை களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கேற்ப இயக்குநர் அறிவழகன்  குற்றம் 23 படத்தின் கதையை வடிவமைத்திருந்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக படம் வந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார்.

ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்புக்கு, தற்போது  பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னை பாராட்டியபோது மிக உற்சாகமாக இருந்தது.

‘குற்றம் 23’ படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்தி வருகிறார் இந்தெர் குமார். அவரது சிறப்பான பணி ‘குற்றம்’ 23 படத்தை விளம்பரம் செய்வதிலும், வெளியிடுவதிலும் தொடரும்  என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது’’ என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறினார் அருண் விஜய்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ