Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலா பால் இப்போ பிஸி..!

'வேலையில்லா பட்டதாரி' படத்துக்குப் பிறகு அமலா பாலின் கேரியரில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டது. விஜபி படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து அமலா பால் தமிழில் மூன்று படம், மலையாளத்தில் ஐந்து படம், தெலுங்கில் ஒரு படம் என நடித்து தள்ளிவிட்டார். இதுவரை அமலா பால் நடிப்பில் ஒன்பது படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும், தற்போது அமலா பால் கையில் அரை டஜன் படங்கள் உள்ளன. மலையாளத்திலும் கன்னடத்திலும் ஒரு படம், தமிழில் வேலையில்லா பட்டதாரி-2, திருட்டு பயலே-2, வடசென்னை என மூன்று படங்களை தன் கையில் வைத்திருந்த அமலா பாலிற்கு தற்போது மேலும் ஒரு தமிழ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. முண்டாசுபட்டி இயக்குநர் ராமின் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு அமலா பால் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் போலீஸாக நடிக்கிறாராம். ஆக மொத்தத்தில், அமலா பால் பிஸியாக கோலிவுட்டில் வலம் வருகிறார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ