Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர் புகார்களால் முடங்கிய தமிழ் சினிமா!

தமிழ் சினிமா

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க முன்னாள் நிர்வாகி  மீது கொடுக்கப்பட்ட புகார்   காரணமாக, இன்று ஒரு நாள் தமிழ் சினிமா முடங்கியது. 

நடிகர் சங்கத்தை போன்றே ஒளிப்பதிவாளர்  சங்கத்திற்கும் புதிய நிர்வாகிகள் அண்மையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்ற புதிய உறுப்பினர்கள், இதற்கு முன் பொறுப்பில் இருந்த 'பெப்சி' சிவாவின்  மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் 

அந்தப் புகாரில், “2008 முதல் 2014 வரைக்குமான சங்கத்தின் கணக்குகள் சரியாக ஒப்படைக்கப்படவில்லை. அடுத்ததாக, 2015ல் மலேசியாவில் நடந்த SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு செலவு செய்துவிட்டு, அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது, அது சம்பந்தமாகப் பலமுறை, கணக்குகளை கேட்டும், பெப்சி சிவா தரவில்லை" என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.  

மேலும்“ கனத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர தாக்கல் செய்யாததால் இந்த முறை ஆடிட்டிங் செல்லும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் தராததால் இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்று SICA உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்தப்பின்னரே, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக பி.சி. ஸ்ரீராம்  கூறியிருந்தார் 

இவரது  புகார்  குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள 'பெப்சி' சிவா,"இதற்கு நான்  பதில் சொல்வது என்  குடும்பத்தை நானே குறை சொல்லுவது மாதிரி. வேறு சங்கங்களில்  இது போல  யாராவது என் மேல்  புகார் கொடுத்து  இருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லி இருப்பேன். டீ குடிக்க  காசு இல்லாத  காலத்தில் இருந்து, அந்த சங்கத்தில் இன்று நான் வெளியேறும்  போது  இரண்டு கோடி சங்கக் காசாக வைத்து விட்டுத் தான்  வந்தேன். பி.சி. சார் தான்  என் குருநாதர். இதுல நான் எதாவது கருத்து சொன்னா   எங்க அப்பா  பத்தி நானே தப்பா  சொல்ற  மாதிரி  இருக்கும்.ஆனா அவரே என மேல  புகார் கொடுத்து இருக்கிறது தான்  மனசுக்கு  சங்கடமா  இருக்கு.

சங்கத்து  கணக்கு எல்லாத்தையும் சரி பண்ணி  கொடுத்துட்டு  தான்  வெளிய  வந்தேன். கொஞ்ச நாளைக்கு  முன்னாடி கூட ஆடிட்டர் வச்சு  எல்லா  கணக்குகளையும்  அவங்ககிட்ட  ஒப்படைத்து  கையெழுத்து போட்டு  கொடுத்துட்டுத் தான்  வந்தேன். ஆனா  இப்ப சொல்றாங்க.எது எப்படியோ இந்த விவகாரம் தொடர்பா பெப்சி சங்க உறுப்பினர்களிடம்  பேசி அடுத்து என்ன பண்ணலாமுன்னு முடிவு பண்ணப்போறோம்.காவல் துறையிடம்  இவர்கள் கொடுத்த புகார்களை சட்ட ரீதியா சந்திக்க  தயாரா  இருக்கேன்"என்று கூறியிருந்தார் 

இந்த நிலையில் தான் பெப்சி தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து பெப்சி சார்பில் வெளியிட்டுள்ள  அறிக்கையில்," தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கம் அபாண்டமாக குற்றம் சாட்டி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதைக் கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட  போவதாவும், அதனால் சென்னையில் எந்த படப்பிடிப்பும் பாடல் பதிவும்,டப்பிங்கும்,எடிட்டிங்கும்  நடக்காது"என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்று(வியாழன்) ஷூட்டிங் எதுவும் சென்னைக்குள் நடைபெறவில்லை.

- பிரம்மா 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ