Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“போராடி டிகிரி வாங்கியவர் சூர்யா..!” - சிவகுமார்

பத்திரிகையாளராக இருந்து சினிமாவில் வசனங்கள் எழுதி தற்போது ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார், த.செ.ஞானவேல்.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர், சமுத்திரகனி, பால சரவணன், ஜான் விஜய், மாரிமுத்து என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், “சூர்யா, கார்த்தி மற்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களான பிரகாஷ், பிரபுவோடு சேர்த்து எனக்கு மொத்தம் நான்கு மகன்கள். நான் அப்படித்தான் இவர்களை பார்க்கிறேன். ‘நான் தான் படிப்பு டிகிரி வாங்கல, நீயாவது வாங்கு’னு சொல்லி சூர்யாவை படிக்க வைத்தேன்.

அவர் போராடி அந்த பி.காம் டிகிரியை வாங்கினார். அப்புறம் வேற வேலைக்கெல்லாம் போய், என்னைப் போல அவரும் நடிகராகிட்டார். அப்புறம் கார்த்தி, அவரும் வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சுட்டு, நான் இந்தியாவுல தான் இருப்பேன்னு சொல்லி இங்கே வந்து, இப்போ அவரும் நடிக்கிறார். 

 

திருப்பூரில் பிசினஸ் பண்ணிட்டு இருந்த பிரகாஷ், பிரபுவும் இப்போ படம் தயாரிக்க வந்துட்டார்கள். இப்படி என் பிள்ளைகள் எல்லாரும் சினிமாக்குள்ள வந்துட்டாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. இவர்கள் நான்கு பேரைப் போல் தான் இந்த படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலும் நான் பெறாத பிள்ளை.

ஒரு பத்திரிகையாளனாக என்னைப் பேட்டி எடுக்க வந்தவர் தான் ஞானவேல். அதற்கு அப்புறம் எனக்கு நெருக்கமாகி இப்போ எங்கள் குடும்பத்தில் ஒருத்தராக இருக்கிறார். சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் மூளையே இவர் தான். இந்தப் படம் வெற்றியடைந்து ஞானவேல் இன்னும் பல உயரங்களைத் தொடவேண்டும் என்று நான் அவரை வாழ்த்துகிறேன்” என்று பேசினார் சிவகுமார். 

படங்கள்: மீ.நிவேதன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close