Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடாது 'மேட்ரிக்ஸ்.' மீண்டும் ஆள வருகிறது மாய உலகம்!

Matrix

ஹாலிவுட் என்றாலே, சில திரைப்படங்களின் பட்டியல் நம் கண் முன் விரியும். அப்படிப்பட்ட பட்டியலில், 1999-ம் ஆண்டு வெளியாகி, உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதே நேரத்தில் வசூலிலும் சாதனை படைத்த 'மேட்ரிக்ஸ்' திரைப்படம் முன்னணியில் இருக்கும். அந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வந்து, கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் சென்றுவிட்டன. இருந்தும், அந்தப் படத்துக்கான மவுசு குறையவில்லை. இந்நிலையில், தற்போது மேட்ரிக்ஸ் படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் வார்னர் ப்ரோஸ் நிறுவனம் இறங்கியுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

ஒரிஜினலாக படத்தில் பணிபுரிந்தவர்கள், இந்த முறை பணிபுரிவார்களா என்று ஸ்திரமாகக் கூற முடியாது. ஆனால், மறுபடியும் எடுக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.  இந்தச் செய்தி பற்றி, மேட்ரிக்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்த கியானு ரீவ்ஸ், 'அப்போது படத்தை எழுதி இயக்கியவர்களே இந்த முறையும் பணியாற்றினால், நானும் பணியாற்றுவேன்' என்று அவரது கருத்தைக் கூறியுள்ளார். 

matrix

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close