Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் ரஜினி படத்தில் தீபிகா படுகோன்?

'கபாலி' படத்துக்குப் பிறகு, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்துக்கான முதல்கட்டவேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன்

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் தற்பொழுது படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆரம்பத்தில் வித்யாபாலனிடம் நடிப்பதற்காக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியுடன் 'கோச்சடையான்' படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. மீண்டும் ரஜினியுடன், தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் கலக்கிவரும் தீபிகா, சமீபத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் படமான 'டிரிபிள் எக்ஸ்' திரைப்படம் செம ஹிட்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close