Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் படங்களைக் குறிவைத்துத் தூக்கும் பவன் கல்யாண்!

பொதுவாக, எந்த மொழியிலும் படங்கள் ஹிட்டாகிவிட்டால், உடனே மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அதிலும், அஜித் படங்களைத் தேடிப்பிடித்து ரீமேக் செய்துவருகிறார், தெலுங்கு நடிகர் பவன்கல்யாண்.

அஜித், பவன்கல்யாண்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியானது, 'வீரம்'. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் 'கட்டமராயுடு'. இதில், பவன்கல்யாண் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம், வரும் மார்ச் 24-ல் வெளியாகவிருக்கிறது. இது மட்டுமின்றி, இயக்குநர் நேசன் இயக்கத்தில் பவன் நடிக்கவிருக்கும் அடுத்த படம்கூட, அஜித் நடித்த 'வேதாளம்' ரீமேக் தான். 

சிவாவுடன் அஜித்தின் மூன்றாவது படமான 'விவேகம்' பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அவற்றைப் பார்த்தே, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் பவன் கல்யாண். 'விவேகம்' ரிலீஸானதும் படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க பவன்கல்யாண் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. 

'விவேகம்' படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது, படக் குழு பல்கேரியாவில் இருக்கிறது. ரத்தக்காயத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அஜித் ஸ்டில் சமீபத்தில் வெளியாகி, படு வைரல். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close