Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகுமாருக்கு ஜோடியாகும் ஹன்சிகா!

'குட்டிப்புலி' படத்துக்குப் பிறகு, மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சசிகுமார். படத்துக்கு,'கொடிவீரன்' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. 

ஹன்சிகா

இயக்குநர் முத்தையா, படப்பிடிப்புக்காக லொக்கேஷன் தேடி சிவகங்கையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விசிட் அடித்துவருகிறார். தவிர, சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சசிகுமார் நடித்து வெளியான 'வெற்றிவேல்' 'கிடாரி' மற்றும் 'பலே வெள்ளையத் தேவா' என்று அனைத்துப் படங்களுமே கிராமத்துக் கதைக்களம்தான். அந்த வரிசையில், மீண்டும் முத்தையா இயக்கத்தில் கிராமத்துக் கதையில் நடிக்கிறார் சசிகுமார். நாயகி மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் உறுதியானதும் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறார்கள்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close