Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தி பட ரீமேக்கா சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்'?

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. 'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் மூன்றாவது படம் இது.

தானா சேர்ந்த கூட்டம் சூர்யா

சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது. இப்படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில் அக்‌ஷய்குமார் நடித்து இந்தியில் வெளியாகி ஹிட்டான 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்  தான் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற செய்தி சமீபகாலமாகவே உலாவிவருகிறது. இரண்டு படங்களின் ஒன்லைன் மட்டுமே ஒன்றாக இருக்கும். மற்றபடி, தமிழுக்கு ஏற்ற மாதிரி கதைக்களம் வேறயாம். அதுமட்டுமின்றி சூர்யாவின் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யா இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

அனிருத் இசையமைத்துவரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்து வருகிறார்கள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close