Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட, இளையராஜா இசை நிகழ்ச்சி’ : விஷால் அணி அறிவிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கேயார் ஆகியோர் தலைமையிலான அணி தனியாகவும், நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் விஷால் தலைமையிலான அணியும் களமிறங்குகிறது.
 

Vishal


'நம்ம அணி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அணியில், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் பாண்டிராஜ், மிஷ்கின், ஞானவேல்ராஜ் உள்ளிட்டோர் 12 வாக்குறுதிகளோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்ட கையோடு, தமிழகம் முழுவதும் உள்ள தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து, வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் இன்று நடந்த கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

கௌரவ செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஞானவேல்ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில், “தேர்தலில் நிற்கும் நாங்கள் 12 வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளோம். இதனை ஓராண்டுக்குள் நிறைவேற்றவில்லை என்றால், அனைவரும் ராஜினாமா செய்வோம்”, என்றார்.

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரகாஷ்ராஜ், “இதுவரை பதவியில் இருந்தவர்கள் வேலை செய்யவில்லை. குறிப்பிட்டவர்களே பதவி வகித்துவந்தார்கள். தவறு நடக்கும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவேதான் போட்டியிட வந்தோம்” என்றார்.
 
இயக்குநர் பாண்டிராஜ், “நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் 'நம்ம அணி'யினர் செயல்பட்டுவருகின்றனர். சினிமாவைச் சேர்ந்த பலரது வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல பேருதவி புரியும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை, சொல்ல முடியாத துயரத்தில் உள்ளது. எனவே, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இசைஞானி இளையராஜாவை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டு உள்ளோம். இதன்மூலம் 100 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ உள்ளோம். உறுப்பினர்கள் அனைவரையும் தாய்மாமன்களாக நினைத்து, நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறோம். விஷால் அணியில் நான் போட்டியிட்டாலும், இந்த அணியை அதிகம் கேள்வி கேட்பவன் நானாகத்தான் இருப்பேன். நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட, இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரகாஷ்ராஜ் செய்துள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சிமூலம் 100 கோடி ரூபாய் திரட்டப்படும் எனக் கூறி தாணு நிறைவேற்றவில்லை. அவர் நிறைவேற்றாததை எங்கள் அணி நிறைவேற்றும்” என்றார்.

இறுதியாகப் பேசிய விஷால், “தமிழகத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களின் குறைகளையும் கேட்டறிந்துவருகிறோம். வாக்கு கேட்கவில்லை. இது திரைப்படத் துறையைக் காப்பாற்றவேண்டிய தேர்தல். அனைத்துத் திரைப்பட தயாரிப்புக்கும் நாங்கள் வழிகாட்டுவோம். எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இனி தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் இணைந்து செயல்படுவோம். நலிவடைந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படமெடுக்கவைப்பதே எங்களின் குறிக்கோள்” என்றார்.

-சி.ய.ஆனந்தகுமார்

படம்: என்.ஜி.மணிகண்டன்
 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close