Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகன் தலைக்கு கத்திரி போட்ட வில் ஸ்மித்

ஜேடன் ஸ்மித்தின் அடுத்த படத்தின் தோற்றத்துக்காக அவர் தலை முடிக்கு கத்திரி போட்டுள்ளார் அவரது தந்தையும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித். ஜேடன் ஸ்மித்தின் புதிய சிகை அலங்காரத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ர்ர்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித். இவர் 'கராத்தே கிட்' படம் மூலம் உலக புகழ்பெற்றார். கராத்தே கிட் திரைப்படத்தில் ஜேடன் ஸ்மித்தின் நடிப்புக்கு இணையாக அவரின் தலைமுடி அழகும் ரசிக்கப்பட்டது. சுருள்சுருளான முடியை பின்னல் போட்டுகொண்டு ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்டாகவே வலம் வந்தார். இந்நிலையில், ஜேடன் ஸ்மித்தின் அடுத்த படத்துக்காக அவரின் முடியை வெட்டியுள்ளார் தந்தை வில் ஸ்மித். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,' ஜேடன் ஸ்மித் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டான். நானும் கத்திரியை பயன்படுத்தியிருக்கலாம்' என கூறியுள்ளார்.

தற்போது முழு நேர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜேடன் ஸ்மித். அடுத்ததாக 'லைப் இன் எ இயர்' படத்தில் நடிக்கிறார் ஜேடன் ஸ்மித். அதற்குத்தான் இந்த புது கெட்டப்பாம்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close