Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'8 தோட்டாக்கள்' இயக்குநருடன் கைகோக்கும் அதர்வா

atharva

சமீபத்தில் வெளியான '8 தோட்டாக்கள்' படம் பலரது கவனத்தை ஈர்த்தது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியிலும் ஹிட்டடித்துள்ளது. புதுமுக இயக்குநர் ஶ்ரீகணேஷ் அந்தப் படத்தை இயக்கி, பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் அதர்வா தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ஶ்ரீகணேஷுடன் இணைய இருக்கிறார். நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 

நடிகர் அதர்வா, தானே தயாரித்து வரும் 'செம போத ஆகாத' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மிஷ்டி, அனைகா சோதி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு பிறகு, '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஶ்ரீகணேஷுடன் இணைய இருக்கிறார் நடிகர் அதர்வா. அதற்கான பேச்சுவார்த்தை இப்போது சென்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close