Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - கமல்ஹாசன் கண்டனம்

ஜம்மூ காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மூ  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை காஷ்மீர் இளைஞர்கள் சிலர் தாக்கி அழைத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலானது.

kamal

இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.  இந்தச் சம்பவம் குறித்து காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது, அந்தச் செயலுக்கு நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'என் நாட்டு ராணுவ வீரர்களை தாக்கிய சம்பவம் அவமானத்துக்குரியது. வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதே வீரத்தின் உச்சம். பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னுதாரணமாக உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close