Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னை சிறந்த நடிகராக பாரதிராஜா ஏற்றுக்கொள்ளமாட்டார்..' - ரஜினிகாந்த் பேச்சு

"நான் எவ்வளவுதான் நடித்தாலும் என்னை சிறந்த நடிகராக பாரதிராஜா ஏற்றுக்கொள்ள மாட்டார்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா'  சினிமா என்ற பயிற்சிப் பட்டறை நிறுவனத்தை பாரதிராஜா இன்று தொடங்கினார். அந்த நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், கார்த்தி, நாசர், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகைகள் ராதா, சுகன்யா, பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் கலந்து கொண்டார்.

ரஜினி

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், 'பாரதிராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் என்னைப் பிடிக்கும். ஆனால் நடிகராக என்னைப் பிடிக்காது. நான் எவ்வளவுதான் நடித்தாலும் என்னை சிறந்த நடிகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்' என்றார்.

அடுத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், 'கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். பல தடைகளைத் தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர் பாரதிராஜா. சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஜனநாயகக் கலை' என்றார்.

வைரமுத்து பேசும்போது, 'மண்ணுக்கு பெருமை சேர்க்கும் படங்களை பாரதிராஜாவின் பயிற்சிப் பட்டறை உருவாக்கும் என்று நம்புகிறேன்' என்றார். பாரதிராஜா பேசும் போது,'திரைத்துறை என் வாழ்க்கையை முழுமை ஆக்கியது. வேறு துறையில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு சாதித்திருப்பேனா என்று தெரியாது' என்றார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close