Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டி.வி சேனல்களுக்கு இலவச பாடல்களைக் கொடுக்க வேண்டாம்'- தயாரிப்பாளர்கள் சங்கம்!

'தயாரிப்பாளர்களே, பாடல்கள், ட்ரெய்லர்கள் அல்லது திரைப்படம் சம்பந்தப்பட்ட மற்ற எதையும் சேனல்களுக்கு இலவசமாக வழங்க வேண்டாம். நம் பொருளுக்கான மரியாதை மற்றும் மதிப்பை மீட்டெடுப்போம்' என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், வெற்றிபெற்றார். மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளாக விஷாலின் ‘நம்ம அணி’ பெரும்பான்மையுடன் தேர்வானது.

விஷால் தலைமையிலான 'நம்ம அணி' தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் பிரச்னை, சேட்டிலைட் உரிமம், சிறிய - பெரிய படங்கள் என்று பாகுபாடில்லாமல் படங்களை ரிலீஸ் செய்வது, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு முதல் பல வசதிகள் ஏற்பாடுசெய்தல் எனப் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறித்தான் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார்கள். அதேபோல, அவர்களின் அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close