Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்துயிர் பெற்ற விஸ்வரூபம் 2-ம் பாகம்!

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு அதற்குப் பின்னரான படத் தயாரிப்பு வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

விஸ்வரூபம் 2

டப்பிங் மற்றும் தயாரிப்புக்குப் பின்னரான வேலைகள் நடந்துவரும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தினை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸுடன் இணைந்து ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என அத்தனை வேலைகளையும் கமலே எடுத்து செய்து வருகிறார். பல பிரச்னைகளாலும் தடைப்பட்டுக் கொண்டே வந்த இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close