Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து! மே 5ல் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு!

மகாபாரதம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

kamalhasan

சில நாள்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அப்போது, மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில், இந்திய இதிகாசமான மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவதூறாகப் பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யாத பழவூர் காவல்துறை ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஒருமாதம் அவகாசம் கொடுத்தும் அறிக்கை தாக்கல் செய்யாததால் இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close