Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருட்டு வி.சி.டி காரர்களை பிடித்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு: விஷால் அதிரடி அறிவிப்பு

நடிகர் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் விஷால். இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கு முன்பே அவர் திருட்டு வி.சி.டி-களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக, திருட்டு வி.சி.டி விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்குச் சென்று அதிரடி காட்டினார் விஷால்.

Vishal

இதையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, திருட்சி வி.சி.டி விற்பனையாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த 'விளையாட்டு ஆரம்பம்' பட விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

விழாவில் விஷால் பேசுகையில், "தியேட்டரில் கேமரா வைத்து படத்தை காப்பி செய்து, திருட்டு வி.சி.டி தயாரிக்கும் கும்பலை அல்லது நபரை தியேட்டர் நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்து எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாலா, பேரரசு மற்றும் 'விளையாட்டு ஆரம்பம்' படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close