Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் 2.0 படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

சிவாஜி, எந்திரன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-ரஜினி காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில், தயாராகி வரும் படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 400 கோடி ரூபாய் செலவில், மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக, பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

2.0

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்தப்படத்தை வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும்  என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்கு, இன்னும் சில காலம் தேவைப்படுவதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close