Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய விருது வென்ற சுட்டி ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

குஞ்சு தெய்வம் என்ற மலையாளப் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுட்டி ஸ்டார் ஆதிஷ் பிரவீன். இந்தப் படத்துக்காக, அண்மையில் அவருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மலையாள சினிமாவில் நடித்தாலும், ஆதிஷ் பக்கா விஜய் வெறியர்.

Vijay, Adhish praveen


தேசிய விருது வழங்கப்பட்ட பிறகு கூட, இந்த விருதை விட, நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று ஆதிஷ் தெரிவித்தார். இதையடுத்து, ஆதிஷ் குறித்து, விஜய்யின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. 
இந்நிலையில், விஜய் தனது ஈ.சி.ஆர் கெஸ்ட் ஹவுஸ்க்கு ஆதிஷை வரவழைத்துள்ளார். நேற்று நடந்த இந்த சந்திப்பின் போது,  இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடியுள்ளனர். மேலும், செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். தேசிய விருதுகளைப் போல மேலும் பல விருதுகள் பெற சுட்டி ஸ்டாருக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.


தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் ஆதிஷ், தற்போது செம ஹேப்பியாம். இந்த சந்திப்பின் போது, ஆதிஷின் தாய் மற்றும் கேரள மாநில விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close