Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட் படத்தில் தனுஷ்!

தமிழ்ப் பட கதாநாயகனாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தியில் இவர் படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளன.

இவர் இந்தியில் நடித்த ஷமிதாப் மற்றும் ராஞ்சனா இவருக்கு இந்தியுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ்.

தமிழில் பிஸியாக தற்போது 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை', 'விஐபி 2', 'மாரி 2' மற்றும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இப்போது இவர் ஹாலிவுட் உலகில் தன் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராகி விட்டார். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் உலகில் அறிமுகமாகிறார். 

இந்தப் படம் இதே பெயரிலுள்ள நாவலின் கதையாகும். இந்த நாவல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கனடா திரையுலகைச் சேர்ந்த கென் ஸ்காட் என்பவர் திரைப்படத்தை இயக்குகிறார். முதலில் இந்தப் படத்தை பிரெஞ்ச் இயக்குநர் ஒருவர் இயக்குவதாக இருந்தது. ஆனால் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கென் ஸ்காட் ஒப்பந்தமாகியுள்ளார். 

படத்தில் மாய ஜாலங்கள் செய்பவராக தனுஷ் நடிக்கவுள்ளாராம். மே 14-ஆம் தேதி படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் தொடங்குகிறதாம். பாரீஸ் மற்றும் ரோமிலும் படத்துக்கான ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close