Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சல்மான் கானின் 'டியூப்லைட்' டீசர்

பாலிவுட்டில், 51 வயது வரை பேச்சிலராக இருக்கும் சல்மான் கானின் 'டியூப்லைட்' படத்தின்  டீசர், நேற்று  வெளியானது. டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே, பாலிவுட் பிரபலங்கள் பலர் ட்விட்டரில்' டியூப்லைட்' படத்தில் சல்மானின் நடிப்பைப் புகழ ஆரம்பித்துவிட்டனர்.

 

இந்த டீசரைப் பார்க்கும்போது, சல்மான் இதில் குழந்தைத்தனமான, அப்பாவியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1962-ம் ஆண்டு  சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த போரை மையமாகவைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளை லடாக்கிலும் மணாலியிலும் எடுத்துள்ளனர். இந்தப் படத்தில், சீன நடிகை ஜீ ஜீ நடித்துள்ளார். நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன், மறைந்த நடிகர் ஓம்பூரி, முகம்மது ஜிஷான், சோகைல் கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜூன் மாதம் 23-ம் தேதி, ரம்ஜான் ஸ்பெஷலாக 'டியூப்லைட்' ரிலீஸ் ஆகிறது. ரம்ஜான் அன்று இவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனால், படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது பாலிவுட் சினிமாவின் நம்பிக்கை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close