Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்குப் படம் ரீமேகில் ஜி.வி.பிரகாஷ்!

தெலுங்கு ரசிகர்கள் யாரும் 2011-ம் ஆண்டு நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான 100% லவ் படத்தை மறக்க மாட்டார்கள், தெலுங்கில் ஹிட் கொடுத்த இந்தப் படம், இப்போது அறிமுக இயக்குநர் சந்திரமெளலி இயக்கத்தில் தமிழில் ரெடியாகிறது.

இந்தப் படத்தைத் தெலுங்கில் இயக்கிய இயக்குநர் சுகுமாரே தமிழில் கிரியேடிவ் சினிமாஸ் NY சார்பாக, என்.ஜே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.  இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரிய பொருட் செலவில் லண்டனில் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தில் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் போன்ற இந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டட்லி, இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்தி இன்னும் வெளியாகவில்லை.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close