Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1000 கோடி வசூல்.... ரசிகர்களுக்கு பிரபாஸ் எழுதிய நெகிழ்ச்சியான ஃபேஸ்புக் மடல்!

பிரம்மாண்ட திரைப்படமான 'பாகுபலி 2', 1000 கோடி வசூலில் இணைந்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ’பாகுபலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆயிரம் கோடி வசூலை உறுதி செய்துள்ளது பாகுபலி படக்குழு.

Bahubali 2
 

ஆயிரம் கோடி வசூல் குறித்த செய்தி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் இவ்வேளையில் பாகுபலி நாயகன் பிரபாஸ் ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு மடல் ஒன்றை எழுதி உள்ளார். அப்பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு,

என்னை அன்பு மழையால் நனைய வைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பை ஈடுகட்ட என்னால் முடிந்த கடின உழைப்பை கொடுத்து பாகுபலி 2 படத்தில் நடித்தேன். திறமையை வெளிப்பெடுத்தினேன். என் அன்பை மீண்டும் மீண்டும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்த பிரமாண்ட படைப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close