Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளை வெளியாகிறது 'சச்சின் ஆந்தம்'..!

கிரிக்கெட்டின் காட் பாதர் என்று ரசிகர்களால் புகழப்படுபவர் சச்சின். இவர் கிரிக்கெட் களத்தில் நின்றாலே போதும். இந்தியா ஜெயித்துவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் பிரகாசமாக துளிர்க்கும்.

அப்படிப்பட்ட சச்சின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்கு 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' எனப் பெயர் வைத்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

சச்சின் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு நாளைய நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாகத்தான் இருக்கும்.  ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 'சச்சின் ஆந்தம் ' என்ற பாடலை சச்சின் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் நாளை இணைந்து வெளியிட உள்ளனர். 

சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்தான். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close