Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸை பீட் செய்த பாகுபலி-2..!

உலகெங்கிலும் 9,000 திரையரங்குகளில் வெளியானது பாகுபலி 2. வெளியான 9 நாள்களிலே 1000 கோடி ரூபாய் வசூல்  செய்து, இந்தப் படம் சாதனை படைத்தது.

இந்தி திரையுலகில் மட்டும் இந்த படத்தின் வசூல் 300 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பாகுபலி வெளியிட்ட திரையரங்குகளில் எல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பி வழிகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகுபலி-2 படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதில், "பாகுபலி 'USA பாக்ஸ் ஆபிஸிலும்' கல்லா கட்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர். 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' 4077 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, ஒரு காட்சிக்கு சராசரியாக 4890 டாலர் வசூல் செய்ததாம். ஆனால் பாகுபலி 425 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, ஒரு காட்சிக்கு சராசரியாக 24,364 அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பாகுபலியைவிட  'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' 10 மடங்கு அதிகமான திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அமெரிக்காவில்  'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'  சாதித்ததை விட பாகுபலி சாதித்ததுதான் அதிகமாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close