Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலையரசன் நடிப்பில், 'எய்தவன்' படத்தின் நான்கு நிமிட வீடியோ..!

'மெட்ராஸ்' புகழ் கலையரசன், கதாநாயகனாகவும்  'பிச்சைகாரன்'  புகழ் சாத்னா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம்தான் 'எய்தவன்'. ஃப்ரெண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.சுதாகரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். பார்தவ் பார்கோ இசையமைத்திருக்கும் (4 பாடல்கள்) இந்தப் படத்துக்கு, பிரேம்குமார் ஒளிப்பதிவுசெய்திருக்கிறார். 

Yeidhavan


நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சௌமியா, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஐ.ஜே. அலன் எடிட்டிங் செய்துள்ளார். ஏழைகளுக்குக் கல்வி என்பது இன்றைய சூழ்நிலையில் பெரும் பிரச்னையாக இருக்கிறது. முறையான கல்வியைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி, ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார், சக்தி ராஜசேகரன்.

 

 

 


இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் 4.27 நிமிட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் 'சைத்தான்', 'எமன்' படத்தின் சில காட்சிகளை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு ப்ரமோட் செய்தனர்.


இந்த நிலையில், தற்போது 'எய்தவன்' படக்குழுவினர் விஜய் ஆண்டனியின் ஸ்டைலில் படத்தை புரொமோட் செய்துள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close