Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபுதேவாவுடன் கைகோக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ’இறைவி’ படம், பல விமர்சனங்களைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் சில விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக இயக்கும்  படம் என்ன என்று தெரிந்துகொள்ள அவரின் ரசிகர்கள் ஆவலாக இருந்தபோது, நடிகர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ட்விட் தட்டியிருந்தார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக செய்திகள் வந்தன. மேலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனக்கு கிடைத்திருக்கும் இந்த குறுகிய இடைவெளியில், நடிகர் பிரபுதேவாவைவைத்து ஒரு படம் பண்ண முடிவுசெய்துள்ளாராம்.  கார்த்திக் சுப்புராஜ், படத்தின் கதையை பிரபுதேவாவிடம் சொல்ல, அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். அதனால் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரபுதேவா இணையும் இந்த புதிய படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க முடிவுசெய்துள்ளார் கார்த்திக்.

பிரபுதேவா இப்பொழுது பாலிவுட் உலகில் பிஸியாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஹன்சிகாவுடன் 'குலேபகாவலி' மற்றும் சில படங்கள், அதுமட்டுமன்றி கார்த்தி விஷால் இணைந்து நடிக்க உள்ள ' கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தையும் இயக்க உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close