Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரேடியோவுக்கு குட் பை சொல்லும் ஆர்.ஜே.அஜய்..!

சென்னைத் தமிழை முதன்முதலில் ரேடியோவில் பேசி நிகழ்ச்சி நடத்தியவர் மிர்ச்சி ஆர்.ஜே.அஜய். கடந்த 14 நான்கு வருடமாக சென்னை ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே.வாக இருப்பவர் அஜய். 2003ஆம் ஆண்டு 'டோட்டல் உடான்ஸ்' ஷோவின் மூலமாகத்தன் ரேடியோ பயணத்தை ஆரம்பித்த அஜய், சமீப காலமாக மார்னிங்  மெலடி என்ற மார்னிங் பிரேக் பாஸ்ட் ஷோ மூலம் பலரின் மார்னிங் உற்சாகத்துக்கு காரணமாக இருக்கிறார்.

காலை 7 மணி முதல் 11 மணி வரை ரேடியோவில் இவரது வாய்ஸை கடந்து செல்லாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் சென்னைத் தமிழில் மிகவும் சிறப்பாக பேசுவார். நிகழ்ச்சிகளின்போது இவர் தரும் நியூஸ் அப்டேட்ஸ் மற்றும் டிராபிக் அப்டேட்ஸ்களுக்கே இவருக்கு ரசிகர்கள் அதிகம். தமிழில் ரேடியோவுக்காக இவர் வாங்கிய முதல் விருது ஆனந்த விகடனின் பெஸ்ட் ஆர்.ஜே அவார்ட் தான். இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் பலர் ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜே அஜய்க்கு வாழ்த்துகள் மற்றும் 'ஏன் அஜய் இந்த முடிவு' என போஸ்ட் போட்டுக் கொண்டு இருந்தனர். என்ன என்று பார்த்தால் அஜய் இன்றுடன் தன் ரேடியோ பயணத்துக்கு குட் பை சொல்கிறார் என்று தெரியவந்தது. இது பற்றி அவரிடமே தொடர்பு கொண்டு கேட்டோம்.

''இந்த முடிவால் சிறிது வருத்தமாக இருந்தாலும் பல நாள்களாக யோசித்து எடுத்த முடிவுதான். இன்றைய டிஜிட்டல் மீடியாவில் அடுத்த பரிமாணத்துக்குச் செல்வதற்காகத்தான் இந்த முடிவு. சில படங்களிலும் நடித்து வருகிறேன்’’ என்றார்.

இவர் விக்ரம்பிரபு நடித்த 'இது என்ன மாயம்' மற்றும், பிரபுதேவா நடித்த 'தேவி' படங்களில் நடித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close