Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த விஷால்..!

திருட்டு விசிடியை ஒழித்தே தீர வேண்டும் என்று நடிகர் விஷால் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக சிறிது நாள்களுக்கு முன்பு திருட்டி விசிடி பதிவு செய்பவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகளான விஷால், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், எஸ் கதிரேசன், ஞானவேல் ராஜா, பொருளாளர் எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டோர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்பு திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பாக முதல்வரிடம் ஒரு புகார் மனுவையும் கொடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி விஷால் செய்தியாளர்களிடம், ’’ஏற்கெனவே திருட்டு விசிடி தொடர்பாக சென்னை கமிஷனரிடம் புகார் ஒன்றை கொடுத்தோம். காவல்துறையினரும் திருட்டு விசிடி தொடர்பாக சோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து முதல்வரையும் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி சிறிய திரையரங்குகள் உருவாக்க அனுமதி கோரி, சில கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளோம்’’ என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close