Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையில் இருந்து ரஜினிக்கு வந்த மிரட்டல் கடிதம்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, மும்பை 'டான்'  மறைந்த  ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம் மும்பையில் உள்ள தாராவி பகுதியை மையப்படுத்தி தயாராகவுள்ளதாக கூறப்பட்டது. மும்பையில் உள்ள நிழல் உலக தாதா ஒருவரின் வாழ்கையைத் தழுவி இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனிடையே, மும்பை 'தாதா' ஹாஜி அலிமஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று கூறியுள்ளார். ரஜினியின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close