Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி-ரஞ்சித் இணையும் அடுத்த படத்தின் போட்டோஷூட்  ஓவர்!

கபாலிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் ரஞ்சித் படம் இயக்கும் செய்தியும், அதை தனுஷ் தயாரிக்கப் போகும் தகவலும் வெளியான நாள் முதல் படத்தின் கதை பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. ரசிகர்களும் சில ஃபேன்மேட் போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 

Rajinikanth

ஹாசி முஸ்தஃபா என்பவரின் கதையில் தான் ரஜினி நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது. இதனால் சமீபத்தில் ஹாஜி அலிமஸ்தான் என்பவரின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில் "என் தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" எனக் கூறியிருந்ததால் பரபரப்புக் கிளம்பியது.

நிஜமாகவே அந்தப் படத்தின் கதை ஒரு மும்பை வாழ் தமிழர் பற்றிய கதை தான். 'நாயகன்' படத்தில் மும்பை வாழ் தமிழரான வேலு நாயக்கரின் கதையைத் தழுவிப் படம் எடுக்கப்பட்டதைப் போல தான் ரஜினி படமும் எடுக்க இருக்கிறார்கள். 

மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவர், அங்கிருக்கும் குடிசைப் பகுதி மக்களின் தலைவனாக மாறியது குறித்த கதை தான் ரஞ்சித்-ரஜினி காம்போவில் உருவாக இருக்கிறது. நேற்று, ரஜினி படத்தில் நடிக்க இருக்கும் கெட்டப் போடப்பட்டு ஃபோட்டோ ஷூட்டை சென்னை ஏ.வி.எம்மில் நடத்தியிருக்கிறது படக்குழு. கபாலியில் வேலை செய்த சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி உட்பட அதே டீம் மீண்டும் இணைந்திருக்கிறது. பிற நடிகர், நடிகை தேர்வு இன்னும் இறுதியாகவில்லை. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close