Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகவேந்திரா மண்டபத்துக்குப் படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதமே தனது ரசிகர்களைச் சந்தித்து, போட்டோ எடுப்பதாக இருந்தது. ஆனால், திடீரென்று அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மே 15-ம் தேதி (இன்று) முதல் தனது ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுப்பதாக அவர் அறிவித்தார். இதனால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Rajinikanth


இதற்காக, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, அடையாள அட்டை உள்ள ரசிகர்கள் மட்டும்தான் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, 'க்யூஆர் கோடு' பதிக்கப்பட்ட அடையாள அட்டை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.


இன்று காலை முதலே, ரஜினி ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். இதையடுத்து, முதல் கட்டமாக காலை 8.30 மணி அளவில் கரூர், திண்டுக்கல், குமரி மாவட்ட ரசிகர்களுடன், ரஜினி போட்டோ எடுத்துக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, வரும் 19-ம் தேதி வரை, அவர் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்க உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close