Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு!

நடிகர் ரஜினிகாந்த், இன்று முதல் 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார்.

அப்போது ரஜினி பேசுகையில், "இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும், 'உனது உடலைப் பார்த்துக்கொள், ரசிகர்களைப் பார்த்துப் பேசு, போட்டோ எடுத்துக்கொள்' என்று சொல்வார்.

Rajinikanth


அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆரம்பத்தில், நான் படப்பிடிப்புக்கு தாமதமாகச் செல்வேன். அப்போது, முத்துராமன் என்னிடம், நீ படத்தின் ஹீரோ. படப்பிடிப்புக்கு நீதான் முதலில் வர வேண்டும் என்பார். அப்போது முதல், நான்தான் படப்பிடிப்புத் தளத்துக்கு முதலில் செல்வேன். சில காரணங்களால் வெற்றி விழாக்களைக் கொண்டாட முடியவில்லை. 


வேலை காரணமாக ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை. இலங்கைப் பயணமும் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, ஊடகங்களில், ரஜினி முடிவில் உறுதியாக இருக்க மாட்டார் என்று செய்திகள் வந்தன. தண்ணீரில் இறங்கும்போது, முதலைகள் இருக்கின்றன. அப்போது, கால் வைத்தால் என்ன ஆகும்? அதனால், பின் வாங்கித்தான் ஆக வேண்டும். முரட்டுத் தைரியம் எப்போதும் ஆகாது.

Rajinikanth

அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியாகும். எனது இயக்குநர்கள் அதைச் சரியாகச் செய்ததால்தான், நான் இங்கு நிற்கிறேன். ரஜினி நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் திரையரங்கு வருகின்றீர்கள். நான் நல்லபடங்களைத் தொடர்ந்து கொடுப்பேன்.


சில காரணங்களால், அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று, அந்தக் கூட்டணியை ரசிகர்கள் வெற்றிபெற வைத்தனர். அது முதல், எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. எனது சில ரசிகர்களும் அரசியல் ஆர்வம் அதிகமாகக் கொண்டுள்ளனர். அவர்களை, அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். என் பெயரை தவறாகப் பயன்படுத்த நினைத்தனர். அடுத்தடுத்து ஆதாயத்துக்காக அணுகும்போது, அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது.

Rajinikanth

அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது, நடிகனாக என்னுடைய கடமையைச் செய்கிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்.


அது, கடவுளின் கையில்தான் உள்ளது. என்னைப் பற்றிய அரசியல் செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக வருவேன். காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள். நான் அரசியலுக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ள மாட்டேன். அந்த மாதிரி ஆட்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். நுழையக்கூட விட மாட்டேன் ஒதுங்கிடுங்க. ரசிகர்கள் முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கத்தை விடுங்கள். அடிபட்டதால் சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்" என்றார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close