Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முதல்வன்' படத்தில் இணைந்த 'பாகுபலி' கதாசிரியர்..!

படம் வெளியான தினம் முதல் இன்று வரை பல சாதனைகளைப் படைத்துவருகிறது 'பாகுபலி' திரைப்படம்.

இந்தப் படத்தின் கதாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத், 'முதல்வன்' பார்ட்-2 படத்தில் இணைந்துள்ளார்.
1999-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்  ஹிட்டான படம், 'முதல்வன்'. இந்தப் படத்தை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ஷங்கரே இயக்கியிருந்தார். அதில், அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் புரி உள்ளிட்டோர் நடித்து பாலிவுட்டிலும் மாஸ் ஹிட்டடித்தது.
தற்போது, 'நாயக்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடத்துவருகிறது. இந்தப் படத்துக்கான  கதையை விஜேந்திர பிரசாத் எழுதிவருகிறாராம். ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா, 'நாயக்' படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close