Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் அம்மாவுக்காக பிரார்த்தனை பண்ணுங்க..! - ராகவேந்திர ராஜ்குமார் உருக்கம்

கர்நாடகத் திரையுலகைச் சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா,  எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கிட்டத்தட்ட  ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு,  மார்பகப் புற்றுநோயிலிருந்து குணமடைந்த அவர், தற்போது கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகக்  கோளாறுகளுக்கு சிகிச்சைபெற்றுவருகிறார். இவரது சிகிச்சைபற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவர்,  "பார்வதி அம்மா உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, கண்களைத் திறந்து பார்க்கிறார். வாய் மொழி கட்டளைகளுக்குப்  பதில் சொல்கிறார்" என்று கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்துக்கு, அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், இதுபற்றி பார்வதி அம்மாளின் மகன் ராகவேந்திர ராஜ்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில், "என் அம்மாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் பரவிவருகின்றன. வதந்திகளைப் பரப்பாமல், என் அம்மாவுக்கான  பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close